டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது பாராசூட் டீசர்

13 Nov 2024

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் மொபட்டில் பயணமாகும் இரண்டு சுட்டிக்குழந்தைகளின் அழகான இனிமையான பயணத்தைக் காட்டுகிறது. இதயத்தைக் கவரும் அற்புதமான டிராமாவாக இருக்கும் என்ற உணர்வை அளிக்கிறது.

இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக்கு வித் கோமாளி' புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன், இந்த சீரிஸில் நடிப்பதைத் தவிர, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாளுகிறார்.

இந்த சீரிஸில் நடிகர்கள் காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீவருண் எழுதியுள்ள 'பாராசூட்' சீரிஸிற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த சீரிஸிற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள். இந்த சீரிஸிற்கு கலை இயக்கம் ரெமியன், ஸ்டண்ட் மற்றும் உடைகளை முறையே டேஞ்சர் மணி மற்றும் ஸ்வப்னா ரெட்டி ஆகியோர் செய்துள்ளனர்.

Tags: disney plus hotstar, parachute, teaser

Share via: