ஓடிடி - சாதனை விலைக்கு விற்கப்பட்ட ‘நிசப்தம்’ ?

16 May 2020

கொரானோ ஊரடங்கு சினிமா துறையையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தியத் திரையுலகின் இரண்டாவது பெரிய சினிமா உலகமான தெலுங்குத் திரையுலகின் தெலங்கானா மாநிலத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகலாம் என மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் தலசானி சீனிவாஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தெலங்கானா மாநிலத்திலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டால்தான், மற்றுமொரு தெலுங்கு பேசும் மாநிலமான ஆந்திராவிலும் ஒருசேர திரைப்படங்களை வெளியிட முடியும். 

எனவே, அதுவரையில் படத்தை எடுத்து முடித்த சிலரால் காத்திருக்க முடியாத நிலையை ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள படமான ‘நிசப்தம்’ படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளிவந்தது. ஆனால், அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.

தற்போது ‘நிசப்தம்’ படத்தை ஓடிடியில் வெளியிட பெரிய தொகை கொடுத்து வாங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஓடிடியில் வெளியிட சுமார் 25 கோடி வரையில் கொடுத்து உரிமம் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். எத்தனை மொழிகளில் அப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளார்கள் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் தெரியும்.

‘பாகுபலி 2’ படத்திற்குக் கொடுத்த விலையை விட அதிகம் என்றும் ஒரு தகவல்.

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலின் பாண்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தை ஹேமந்த் மதுக்கர் இப்படத்தை இயக்கி உள்ளார்.

Tags: Nishabtham, Madhavan, Anushka, Anjali, Shalini Pandey, Nisabtham

Share via: