
‘வட கறி’ படத்தில் பிரபல கிளாமர் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவது திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
‘லோ ஆன லைஃப்’... எனத் தொடங்கும் பாடலுக்குத்தான் ஜெய் மற்றும் சன்னி லியோன் நடனமாடியுள்ளனர்.
ஹரீஷ் எழுதியுள்ள இந்த பாடலுக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். ‘முத்தப் புகழ்’ ஜோடியான இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இந்த பாடலை இணைந்து பாடியுள்ளனர்.
ஜெய், சன்னி லியோன் நடனமாடிய பாடல் காட்சியின் புகைப்படம் இன்றுதான் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதைப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்காக புகைப்படத்தோடு இந்த செய்தி....
‘வட கறி’ படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற உள்ளது.