‘டமால் டூமீல்’ - உண்மையைச் சொல்லும் இயக்குனர்...

11 Apr 2014
damal dumeel sriபொதுவாக, அறிமுக இயக்குனர்கள் ஆகட்டும், அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் ஆகட்டும், அவர்கள் படத்தின் கதை எப்படி உருவானது என்பதை அவ்வளவு எளிதில் சொல்ல மாட்டார்கள். எந்த ஆங்கிலப் படத்திலிருந்து தழுவினார்கள், இல்லை எந்த உதவி இயக்குனர்களிடமிருந்து ‘வாங்கிக்’ கொண்டார்கள் என்பதைக் கூட சொல்ல மாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே உண்மையைப் பேசுவார்கள். அப்படி உண்மை பேசும் இயக்குனர்களில் ஒருவராக வந்திருக்கிறார் ‘டமால் டூமீல்’ படத்தின் இயக்குனர்   ஸ்ரீ. இயக்குனர் ஷங்கரிடம், ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றவர். இவர் இயக்கும் முதல் படம்தான் ‘ஸ்ரீ’. “டமால் டூமீல்’ படம் ஒரு த்ரில்லர் படம்தான். ஆனால், நகைச்சுவையோட கொடுத்திருக்கோம். தினமும் நாளிதழ்களில் நாம் படித்துக் கொண்டிருக்கும் பல சம்பவங்களைக் கோர்த்து இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறோம். இது எல்லாமே படத்தோட பின்னணியா வருது. பெங்களூர்ல  ஏடிஎம்-ல போட வச்சிருந்த பணத்தை,  ஒரு இளைஞன் கொள்ளையடிச்சதா சமீபத்துல ஒரு செய்தி எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம். அந்த பணத்தை வச்சி அவனால ஒண்ணுமே பண்ண முடியலை. அவனால எங்கயும் ஓட முடியலை. கடைசில மொத்த பணத்தையும் அவன்கிட்ட இருந்து கைப்பற்றினாங்க. இதை ‘இன்ஸ்பிரேஷன்’-ஆ வச்சிதான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன். த்ரில்லரா படம் வேகமாக இருக்கும், அதே சமயம் நகைச்சுவை, காதல், ஒரு பரபரப்பு இப்படி இரண்டு மணி நேரம் நீங்க எல்லாருமே சுவாரசியமா படத்தை ரசிக்கிற மாதிரி கொடுத்திருக்கிறேன், ” என்கிறார் இயக்குனர் ஸ்ரீ. இந்த படத்தில் வைபவ், ரம்யா ரம்பீசன், கோட்டா ஸ்ரீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, சார்லி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தமன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் சார்பாக சி.ஜே. ஜெயகுமார் படத்தைத் தயாரித்திருக்கிறார். அடுத்த வாரம் 18ம் தேதியன்று படம் வெளியாகிறது. உண்மையைச் சொல்ற இயக்குனர் உயரத்துக்குப் போக வாழ்த்துக்கள்...

Share via: