சூர்யா யார் என்றே தெரியாது...அதிர்ச்சியளித்த கரினா கபூர்

11 Apr 2014
kareena_kapoorலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்து வரும் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான கரினா கபூர், ஒரு பாடலுக்கு நடனமாடுவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து ஒரு அதிர்ச்சியான பதிலை வெளிப்படுத்தியிருக்கிறார் கரினா கபூர். “எனக்கு சூர்யா யார் என்றே தெரியாது. அவரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. எனக்கு ஹிந்திப் படங்களைத் தவிர வேறு மொழிப் படங்களில் நடிக்க விருப்பமே இல்லை,” என அவர் தெரிவித்துள்ள பதில் சூர்யா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யாவைப் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து  ஆச்சரியப்பட வைத்துள்ளது. என்னதான் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ் நடிகர்களைப் பற்றி தெரியாது என பதிலளித்திருப்பது தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது. யாராவது சூர்யா நடிச்ச படங்களோட டிவிடி-யை கரீனாவுக்கு பார்சல் அனுப்புங்கப்பா...

Share via: