சிபிராஜ் நடிக்கும் ‘ஜாக்சன் துரை’ ஆரம்பம்...

20 May 2015
ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் எம்.எஸ்.சரவணன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்து வழங்கும் படம் ‘ஜாக்சன் துரை’. தமிழின் முதல் பழைய கால கட்ட பேய்ப் படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 - ல் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருட் செலவில் பிரம்மமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில், தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ஸாசெரி அறிமுகமாகிறார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கன்ஜுரிங்’ படத்தின் ஒப்பனைத் தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது. தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். திகிலும், நகைச்சுவையும் கலந்த படமாக இப்படம் உருவாகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒளிப்பதிவு - யுவராஜ் இசை - சித்தார்த் விபின் படத் தொகுப்பு- விவேக் ஹர்ஷன் கலை - T.N. கபிலன் நிர்வாகத் தயாரிப்பு - அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், புரொடக்ஷன் கன்ட்ரோலர் - M.பூமதி லைன் புரொடியூசர் - செல்வா தயாரிப்பு மேலாளர் - C.பாலமுருகன் மக்கள் தொடர்பு - நிகில்

Share via: