விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ்
01 Mar 2026
மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸின் டீசர் வெளியிடப்பட்டுளளது.
‘ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு மீண்டும் மணிகண்டன், விஜய் சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது.
பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், விஜே பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் இத்தொடரில் நடிக்கிறார்கள்.
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை, அஜித் குமார், மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
தொழில் நுட்பக் குழு
தயாரிப்பு - ஜியோ ஹாட்ஸ்டார்,
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்குநர்கள் - B. அஜித் குமார், M. மணிகண்டன்
கதை / திரைக்கதை - M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்
ஒளிப்பதிவு - N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்
எடிட்டர் - B. அஜித் குமார்
இசையமைப்பாளர் - ராஜேஷ் முருகேசன்
கலை இயக்குநர் - ஜாக்கி, சாபு மோகன்
மக்கள் தொடர்பு - யுவராஜ்
Tags: Muthu Engira Kaattaan, vijay sethupathi
