முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு – கெளதம் கார்த்திக்

17 Jun 2024

முத்தையாக இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ளார்கள்.

பல்வேறு கிராமத்து படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் முத்தையா. தற்போது தனது மகனை நாயகனாக வைத்து ‘சுள்ளான் சேது’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கவுள்ளார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு, தனது அடுத்தப் படத்தின் கதையினையும் முடிவு செய்துவிட்டார் முத்தையா. இதில் விக்ரம் பிரபு மற்றும் கெளதம் கார்த்திக் இருவரும் நாயகர்களாக நடிக்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

விக்ரம் பிரபு மற்றும் கெளதம் கார்த்திக் ஆகியோருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு உள்ளிட்ட பணிகளை, ‘சுள்ளான் சேது’ வெளியீட்டுக்குப் பிறகு தொடங்கவுள்ளார் முத்தையா. இந்தக் கதையும் முழுக்க கிராமத்து பின்னணியிலேயே உருவாக்கி இருக்கிறார்.

Tags: muthaiah, vikram prabhu

Share via:

Movies Released On July 15