காதலரை கரம்பிடிக்கும் டாப்ஸி

02 Mar 2024

முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, விரைவில் காதலரை திருமணம் செய்யவுள்ளார்.

2010-ம் ஆண்டு தெலுங்கில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. தமிழில் 2011-ம் ஆண்டு ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தற்போது முழுக்க இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியில் அறிமுகமான காலத்திலிருந்து மத்தியாஸ் என்ற பாட்மிட்டன் விளையாட்டு வீரரை காதலித்து வருகிறார் டாப்ஸி. தற்போது இவர் முன்னணி பாட்மிட்டன் விளையாட்டு பயிற்சியாளராக வலம் வருகிறார்.

இவர்களது திருமணம் இந்த (மார்ச்) மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் உதய்பூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார் டாப்ஸி.

Tags: taapsee, marriage

Share via: