#RemakeStarVijay - கொரானோ வந்தாலும் இவங்க சண்டை அடங்காது ?
31 Mar 2020
கொரானோ வந்தாலும் கூட இவர்கள் சண்டை அடங்காது என்பது போல டிவிட்டரில் இன்று விஜய் ரசிகர்களும், மகேஷ்பாபு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அவர்களது அபிமான நடிகர்களின் பெயர்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரு தினங்களக்கு முன்பு ஞாயிறு அன்று டிவியில் ‘கில்லி’ படத்தை ஒளிபரப்பினார்கள். அந்தப் படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த ‘ஒக்கடு’ படத்தின் தமிழ் ரீமேக். அன்றைய தினம் ‘கில்லி’ பற்றி விஜய் ரசிகர்கள் மிகவும் பெருமையாக டிவிட்டரில் பதிவிட ஆரம்பித்தனர். அது இன்று வரை தொடர்ந்தது.
அதைப் பொறுக்க முடியாத மகேஷ்பாபு ரசிகர்கள் இன்று திடீரென டிவிட்டரில் மோதலில் இறங்கினார்கள். #RemakeStarVijay என்ற ஹேஷ்டைக்கை வைத்து டிரென்டிங்க செய்ய ஆரம்பித்தனர். பதிலுக்கு விஜய் ரசிகர்கள், #DummyStarMaheshBabu என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்ய ஆரம்பித்தனர்.
தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த ‘ஒக்கடு’, தமிழில் விஜய் நடிக்க ‘கில்லி’ ஆக மாறி பெரிய வெற்றி பெற்றது. அது போல மகேஷ் பாபு நடித்த ‘போக்கிரி’ படம் தமிழில் விஜய் நடிக்க ‘போக்கிரி’ ஆகவே வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் விஜய் திரையுலக வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
விஜய் நடித்த வெளிவந்த மற்ற ரீமேக் படங்கள்..
காதலுக்கு மரியாதை - அனியத்தி புறாவு (மலையாளம்)
நினைத்தேன் வந்தாய் - பெல்லி சந்ததி (தெலுங்கு)
பிரியமானவளே - பவித்ர பந்தம் (தெலுங்கு)
பிரண்ட்ஸ் - பிரண்ட்ஸ் (மலையாளம்)
பத்ரி - ஜோ ஜித்தா வொகி சிகந்தர் (ஹிந்தி)
யூத் - சிரு நவ்வுதோ (தெலுங்கு)
வசீகரா - நுவ்வு நாக்கு நச்சவ் (தெலுங்கு)
கில்லி - ஒக்கடு (தெலுங்கு)
ஆதி - அதானொக்கடே (தெலுங்கு)
போக்கிரி - போக்கிரி (தெலுங்கு)
வில்லு - சோல்ஜர் (தெலுங்கு)
காவலன் - பாடிகார்ட் (மலையாளம்)
வேலாயுதம் - ஆசாத் (தெலுங்கு)
நண்பன் - 3 இடியட்ஸ் (ஹிந்தி)
அதே சமயம், விஜய் நடித்த பல தமிழ்ப் படங்கள் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆ
Tags: maheshbabu, vijay, twitter, corona