மகேஷ்பாபுவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்த ராஜமெளலி
16 May 2024
மகேஷ்பாபுவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார் ராஜமெளலி.
’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ராஜமெளலி. இதனை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் கே.எல்.நாராயணனா. உலகளவில் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது படக்குழு. மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடும் உடற்பயிற்சி, நடிப்பு பயிற்சி என மேற்கொண்டு வருகிறார் மகேஷ்பாபு.
மேலும், படப்பிடிப்பு தொடங்கிய உடன் எந்தவித நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள கூடாது என்று மகேஷ்பாபுவிடம் தெரிவித்துள்ளார் ராஜமெளலி. படத்தில் அவருடைய கெட்டப் எந்தவித காரணத்தைக் கொண்டு வெளியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ராஜமெளலி.
அதே போல் படத்தின் தலைப்பு இறுதியாகிவிட்டாலும், அதை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடன் அறிவிக்கலாம் எனவும் முடிவு செய்துள்ளார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் படத்தின் பாடல்கள், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருடன் இறுதிகட்ட கதை படிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
Tags: mahesh babu, rajamouli