ஓடிடி தளத்தில் ‘மகாராஜா’ மாபெரும் சாதனை

22 Aug 2024

ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘மகாராஜா’ திரைப்படம் மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது முதல் இந்தியளவில் முதல் இடத்திலேயே பல வாரங்கள் நீடித்தது. மேலும், பல்வேறு நாடுகளிலும் ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் முதல் 10 இடத்திற்குள் இடம் பிடித்தது. பல்வேறு வெளிநாட்டினர் தங்களுடைய இனையத்தில் ‘மகாராஜா’ படத்திற்கு புகழாரம் சூட்டியிருந்தார்கள்.

தற்போது 2024-ம் ஆண்டில் ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பேர் பார்த்த இந்திய படம் என்ற மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. 18.6 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. இந்திப் படமான ‘க்ரூ’ 17.9 மில்லியன் பார்வைகள், ’லாப்பட்டா லேடீஸ்’ 17.1 மில்லியன் பார்வைகளும் பெற்றதே பெரும் சாதனையாக பேசப்பட்டு வந்தது.

இந்த இரண்டு படங்களையும் பின்னுக்கு தள்ளி ‘மகாராஜா’ திரைப்படம் முதல் இடத்தினை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share via: