‘ராயன்’ தேதியில் ‘மகாராஜா’

30 May 2024

‘ராயன்’ வெளியாக இருந்த தேதியில் ‘மகாராஜா’ வெளியாவது உறுதியாகியுள்ளது.

தனுஷ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘ராயன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஜுன் 13-ம் தேதி வெளியாவதாக இருந்தது. இதனை முன்வைத்தே விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தன. தற்போது இதனை ஜூலை வெளியீட்டிற்கு மாற்றியமைத்துவிட்டது படக்குழு. தனுஷ் பிறந்த நாள் வெளியீடாக இருக்கும் என்கிறார்கள் திரையுலகில்.

’ராயன்’ வெளியீடு தள்ளிப் போவதால், அந்த தேதியில் ‘மகாராஜா’ படம் வெளியாகவுள்ளது. நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘மகாராஜா’. இது அவருடைய நடிப்பில் உருவாகும் 50-வது படமாகும். பெரும் எதிர்பார்ப்பிற்குரிய இந்தப் படம் நல்ல வெளியீட்டுத் தேதிக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று (மே 30) வெளியாகவுள்ள ‘மகாராஜா’ ட்ரெய்லரில் படத்தின் வெளியீட்டுத் தேதியினை உறுதிப்படுத்தவுள்ளது படக்குழு.

Tags: raayan, maharaja

Share via: