இழுபறியில் அல்லு அர்ஜுன் – அட்லி படம்
30 May 2024
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருக்கிறது.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன். இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால், இதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. ஆனால், இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால், அட்லியின் பெரியளவில் சம்பளம் கேட்கிறார். அதே போல் அல்லு அர்ஜுன் படத்தின் வியாபாரத்தில் பங்கு என்ற முறையில் சம்பளம் கேட்கிறார். இந்த இரண்டையும் வைத்து முதலீட்டை எடுத்துவிட முடியுமா என்ற பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்,
அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரிய முதலீடு தேவைப்படுகிறது. இந்த முதலீட்டை எப்படி லாபமாக மாற்றலாம் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது படக்குழு. ஆகையால் தான் இன்னும் ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.
மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனமோ இதுவரை யாருடனும் வியாபாரத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் போட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags: atlee, allu arjun