விஷால் 35வது படத்தின் பெயர் ‘மகுடம்’
24 Aug 2025
நடிகர் விஷாலின் 35வது படம் ‘மகுடம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரவி அரசு இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதில் விஷால் உடன் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், அவரது அடுத்த படமாக ‘மகுடம்’ உருவாகி வருகிறது.
முன்னதாக விஷால் நடிக்கும் அடுத்த படம் ‘துப்பறிவாளன் 2’ என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், அதைத் தொடங்காமல் அவர் ‘மகுடம்’ படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இதற்கு முன்பு ‘மகுடம்’ என்ற பெயரில் 1992-ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் இயக்கத்தில் சத்யராஜ், பானுப்ரியா, கவுதமி நடித்த படம் வெளியாகியிருந்தது. 33 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயர் மீண்டும் தமிழ்சினிமாவில் பயன்படுத்தப்படுகிறது.
Tags: magudam, vishal
