வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.

இப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை ஜுன் 21ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் பாடலுக்கான டீசரை நேற்று வெளியிட்டார்கள்.

யுவன் இசையில், மதன் கார்க்கி எழுத, யுவன்ஷங்கர் ராஜா, ரிஸ்வான், பவதாரிணி பாடும் ‘மெஹர்சிலா....’ என்ற அந்தப் பாடலை ரசிக்க சிம்பு ரசிகர்களும், யுவன் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 

கொரானோ தொற்று பரவல் குறைந்து தியேட்டர்கள் திறந்த பின் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.