விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' முதல் பார்வை வெளியீடு
16 May 2022
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். விஜய் தேவரகொன்டா, சமந்தா முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். ஒரு இளமையான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய், சமந்தா ஜோடி பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
விஜய் தேவரகொன்டா பான்-இந்தியா படமாக உருவாகி வரும் ‘லிகர்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்படத்தில் நடித்து வருகிறார்.
Tags: kushi, shiva nirvana, vijay devarakonda, samantha