சந்தானம் நடிக்கும் ‘குலு குலு’ முதல் பார்வை வெளியீடு

11 May 2022

'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் 'குலு குலு'. 

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ' லொள்ளு சபா' மாறன், 'லொள்ளு சபா'  சேசு, டிஎஸ்ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனிக்கிறார். 

இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ். ராஜ் நாராயணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

‘குலு குலு’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனமான சோனி மியூஸிக் கைப்பற்றியிருக்கிறது. 

தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.  படத்தை ஜுன் மாதம் வெளியிட உள்ளார்கள்.

Tags: gulu gulu, rathnakumar, santhanam, santhosh narayanan, athulya chandra, namitha krishnamurthy

Share via: