கவின் உடன் இணையும் நயன்தாரா?

11 May 2024

கவின் உடன் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் ‘ப்ளடி பக்கர்’ மற்றும் ‘கிஸ்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதற்குப் பிறகு கவின் புதிய படங்கள் எதையும் ஒப்பந்தமாக கையெழுத்திடவில்லை.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க கவின் தேதிகள் ஒதுக்குவார் என தெரிகிறது. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி, பல்வேறு பாடல்களையும் விஷ்ணு எடவன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் விஷ்ணு எடவன் - கவின் படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இதில் கவின் உடன் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தமாக இந்தக் கூட்டணி உறுதியாகும் என தெரிகிறது. இதுவரை அனைத்துமே பேச்சுவார்த்தை நிலையிலேயே இருக்கிறது.

Tags: kavin, nayanthara

Share via:

Movies Released On March 15