‘கார்த்திகேயா 2’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும்   ஒரு சூப்பர்நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும்.  இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார்.

 டீ.ஜி விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் இணைந்து தயாரிக்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர், கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்பதிவில், கால பைரவா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்
 
இது பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் அதிக உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும். இயக்குநர் சண்டூ மொண்டேடி தனது புது வகையான திரைக்கதையை படத்தில் கொண்டு வந்திருக்கிறார். ​​கதாநாயகன் நிகில் சித்தார்த்தா அசைக்க முடியாத  நம்பிக்கையுடன், அசத்தலான  திரை ஈர்ப்புடன் வந்துள்ளார்

 டீ.ஜி விஸ்வ பிரசாத் கூறியதாவது, “கார்த்திகேயா என்ற கதாபாத்திரம் பலவிதமான புராண மற்றும் வரலாற்றுக் கதைகளை விரிவுபடுத்தி ஆராயும் திறனைக் கொண்டுள்ளது. இயக்குநர்  சண்டூ மொண்டேட்டியின்  திரைக்கதைகள் வரலாறு மற்றும் பழங்காலம் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருப்பதால், எந்த வித தயக்கமும் இன்றி அவரது இந்த இந்திய  காவிய சாகசத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன், நாங்களும் இப்படைப்பினை  முன்னோக்கி கொண்டு செல்ல முடிவெடுத்தோம். கார்த்திகேயா 2  எங்கள் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கை தந்திருக்கும் ஒரு படம்”என்றார்.

அபிஷேக் அகர்வால் கூறும்போது, ​​“கார்த்திகேயா 2 இன்றுவரையிலான எங்களின் லட்சிய படங்களில் ஒன்றாகும். சண்டூ இக்கதையை விவரித்தபோதே, ​​நாங்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். இது தர்மத்தை கொண்டாடும் மற்றும் உங்களை ஒரு மாய சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக இருக்கும்"என்றார்.