கார்த்தியை இயக்கப் போகும் மித்ரன்
17 Nov 2020
‘இரும்புத் திரை, ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லட்சுமண்குமார் தயாரிக்கும் நான்காவது படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராக உள்ளது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ள இப்படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
தீபாவளி அன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. விரைவில் மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும்.
Tags: karthi, ps mithran, gv prakashkumar