‘கங்குவா’ அப்டேட்: கெஸ்ட் ரோலில் கார்த்தி

24 Jul 2024

‘கங்குவா’ படத்தில் கார்த்திக் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கங்குவா’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

‘கங்குவா’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முனைப்புடன் பணிபுரிந்து வருகிறது. தற்போது ‘கங்குவா’ படத்தின் ஒரு வாரப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் கார்த்தியை வைத்து சில காட்சிகள் படமாக்கி வருகிறார்கள். ‘கங்குவா’ 2-ம் பாகம் தொடங்கத்திற்காக இது நடைபெறுகிறது. 2-ம் பாகத்தில் சூர்யா Vs கார்த்தி என்பது போல் கதையை உருவாக்க இருக்கிறார் சிவா. இதன் படப்பிடிப்பு 2026-ம் ஆண்டு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘கங்குவா 2’ வெளியீடு இருக்கும் என்று ஞானவேல்ராஜா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags: karthi, kanguva, suriya

Share via: