அஜித்தை இயக்கும் பிரசாந்த் நீல்?

24 Jul 2024

அஜித் நடிக்கும் படத்தினை பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதற்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்தப் படங்களை முடித்தவுடன், பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி இரண்டு படங்களில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும், அதில் ஒரு கதை ‘கே.ஜி.எஃப் 3’ படத்துக்கு முன்னோட்டமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ‘கே.ஜி.எஃப் 3’ படத்தில் யஷ் மற்றும் அஜித் இருவரும் நடிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பெரும் பொருட்செலவில் ‘கே.ஜி.எஃப் 3’ அமையும் என்பது மட்டும் உறுதி. இந்தக் கூட்டணி தொடர்பாக சமீபத்தில் அஜித் – பிரசாந்த் நீல் சந்திப்பு நடைபெற்று இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பான உண்மையான தகவல் என்ன என்பது தெரியவரும்.

Tags: ajith, prashanth neel

Share via: