எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ‘கடமையை செய்’
02 Aug 2021
கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் TR ரமேஷ், நாகர் பிலிம்ஸ் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கடமையை செய்’.
சுந்தர் .சி கதாநாயகனாக நடித்த ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தை இயக்கிய வேங்கட்ராகவன் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த், கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி, அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘நெடுநல்வாடை, எம்.ஜி.ஆர் மகன்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு - N.B ஸ்ரீகாந்த் , ‘தடம்’ படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார். பாடல்கள் அருண்பாரதி, சண்டை பயிற்சி பிரதீப் தினேஷ், நடனம் தீனா, சாண்டி, மக்கள் தொடர்பு மதுரைசெல்வம், மணவை புவன்.
படம் பற்றி இயக்குனர் வேங்கட்ராகவன் கூறுகையில்,
“படத்தில் எஸ்ஜே.சூர்யாவிற்கு டபுள் டைம் ஸ்டிராங் கேரக்டர். அவர் இப்படித்தான் இருப்பார் என்ற மனநிலையில் இருப்பீர்கள். ஆனால் இந்தப் படத்தில் அவர் அப்படி இருக்க மாட்டார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அவருக்கு. ஃபேமிலி ஆடியன்ஸ்ல இருந்து அத்தனை பேரையும் கவர்ந்திழுக்கிற படமா எல்லா ஜானரையும் இதில் வைத்துள்ளோம்.
இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ‘கடமையை செய்’ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நிறைவுற்றது. இறுதிக்கட்ட வேலைகள் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்குமாக PCR TEST ( கொரோனா TEST ) எடுக்கப்பட்டு அதில் அனைவருக்கும் NEGATIVE என வந்தபிறகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். இப்படியாக இரண்டு மூன்று முறை தயாரிப்பு தரப்பில் கொரோனா கேம்ப் அமைக்கப்பட்டு அனைவருக்கும் நெகட்டிவ் என உறுதிசெய்யப்பட்டு பிறகே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தினார்கள்.
படப்பிடிப்பு இனிதே முடிந்தது என நாங்கள் சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்த நிலையில் யாஷிகா ஆனந்த் வாகன விபத்தில் சிக்கி அவருடன் சென்ற தோழி மரணம் அடைந்த நிலையில் படுகாயத்துடன் உயிர் தப்பினார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யாஷிகா ஆனந்த் தொழில் ஈடுபாடும், திறமையும் மிக்கவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்,” என்கிறார்.
Tags: sj surya, yashika anand, kadamaiyai sei, venkatraghavan, arunraj

