ஜெ எம் பஷீர் தயாரிப்பில் உருவாகும் ”மருது ஸ்கொயர்”
16 Feb 2023
கடந்த 2019ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றவர் ஆயிஷா. அழகும், ஆற்றலும் ஒருங்கே அமைந்த ஆயிஷா வழக்கறிஞர் படிப்பு படித்து வருகிறார்.
ஆயிஷா விரைவில் தமிழ் திரைப்படத்தில் வீரமங்கையாக அறிமுகமாக உள்ளார்.
ஜெ . எம். பஷீர், மருது சகோதரர்கள் வாழ்க்கை படமாக உருவாக விருக்கும் "மருது ஸ்கொயர்" என்ற படத்தில் பெரிய மருதுவாக நடிக்கிறார்.
பெரிய மருது, சின்ன மருதுவின் தலைவியாக திகழ்ந்தவரும் முதல் இந்திய பெண் சுதந்திர போராட்ட வீராங்கனையாகவும் திகழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியார் வேடத்தில்தான் ஆயிஷா நடிக்கிறார்.
இந்த சரித்திர கதாபாத்திரத்திற்கு ஆயிஷா கடுமையான வாள் சண்டை பயிற்சி, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் முறைப்படி கற்றிருக்கிறார்.
வேலு நாச்சியாராக நடிக்க உள்ள ஆயிஷா தற்போது தேசிய தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ள ஜெ.எம் பஷீரின் மகள் என்பது குறிப்பிடத் தக்கது.
மருது ஸ்கொயர் படத்தை டிரெண்ட்ஸ் சினிமா பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்ட பொருட் செலவில் ஜெ.எம்.பஷீர் அவர்கள் தயாரிக்கிறார் .
ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய ஆர்.அரவிந்த்ராஜ் தற்போது தேசிய தலைவர் திரைப்படத்தை முடித்துவிட்டு.. மருது ஸ்கொயர் படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்,நடிகைகள் விபரம் விரைவில் படக்குழுவால் வெளியிடப்படும்...
வரும் ஏப்ரல் மாதம் "தேசிய தலைவர்" படம் வெளியான பின்னர் சிவகங்கை சீமையில் இன்றைக்கு இருக்கும் ராணியின் அரண்மனை யில் "மருது ஸ்கொயர்" படத்தை தொடங்க இருக்கிறார்கள்.
Tags: jm basheer, maruthu square ,ayeesha