வரலாற்று சாதனை படைத்த “ஜவான்” பட பாடல்!

01 Aug 2023

 

 

ஒரே படத்தின் மூன்று மொழி வீடியோக்களும் YouTube ல் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உலகளவில் சாதனை படைத்துள்ளது, உண்மையில் இது இந்திய அளவில் மிகப்பெரும் சாதனையாகும்.

ஜவான், முதல் பாடல் ஹிந்தியில் 'ஜிந்தா பந்தா', தமிழில் 'வந்த எடம்' மற்றும் தெலுங்கில் 'தும்மே துலிபேலா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் டிஜிட்டல் உலகத்தை புயல் போல் தாக்கியது, YouTube ல் 46 மில்லியன் பார்வைகளை குவித்து, 2023 இல் மேடையில் மிகப்பெரிய சாதனைப் பாடலாக மாறியுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து பெறப்பட்ட பார்வைகளை இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஜவான் படத்தின் முதல் பாடல் அனைத்து மொழி பார்வையாளர்களால், அனைத்து தளங்களிலும், மொழிகளிலும் பரவலாகப் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனையின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், முதன்முறையாக, ஒரு திரைப்படத்தின் மூன்று மொழி வீடியோ 24 மணிநேரத்திற்குள் YouTube இன் உலகளாவிய தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது, இது சமீபத்திய காலங்களில் எந்தவொரு பாடலும் செய்யாத சாதனையாகும். இந்த அசாதாரண சாதனை, ஜவானின் இசையின் இணையற்ற புகழ் மற்றும் உலகளாவிய அளவிலான எதிர்பார்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜவான் திரைப்படம், மொழியியல் தடைகளைத் தாண்டி உலகளவில் பார்வையாளர்களைக் ஈர்த்து வருகிறது.

'ஜிந்தா பந்தா,' 'வந்த எடம்,' மற்றும் 'தும்மே துளிபேலா' ஆகிய இசை வீடியோக்கள் ஜவான் படத்தின் ஒரு சிறு அறிமுகமாக அமைந்துள்ளது. இப்பாடலில் ஷாருக்கான் ஆயிரக்கணக்கான பெண் நடன கலைஞர்கள் மற்றும் படத்தில் நடித்துள்ள அவரது பெண் சக நடிகர்களுடன் அழகாக நடனமாடுகிறார். துடிப்பான மற்றும் கவர்ச்சியான டியூனுடன், இந்தப் பாடல் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனிருத்தின் முத்திரையை கொண்டுள்ளது. இந்த பாடல் வெளியீட்டின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூன்று மொழிகளிலும் பாடலின் வரிகளுக்கு உதடசைத்து, ஷாருக்கான் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 

Tags: ஷாருக்கான், ஜவான், அட்லீ, வந்த எடம், அனிருத்

Share via: