’இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ திட்டங்கள்

16 May 2024

‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ படத்தின் வெளியீட்டு திட்டங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’. இதனை லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ஜூன் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி ஜூலையில் வெளியாகவுள்ளது ‘இந்தியன் 2’.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் பணிகளுக்கு ரூபன் பணிபுரிந்து வருகிறார். மேலும், ‘இந்தியன் 2’ படத்தின் முடிவில் ‘இந்தியன் 3’ படத்தின் ட்ரெய்லரை இணைக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். அத்துடன் ‘இந்தியன் 3’ படத்தின் வெளியீட்டு தேதியும் இருக்கும்.

தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் ஒரே கட்டமாக முடிக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பது தெரிகிறது. ‘இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு முழுமையாக ‘கேம் சேஞ்சர்’ பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார் ஷங்கர்.

Tags: indian 2 , shankar, kamal haasan

Share via: