’இந்தியன் 2’ கதைப் பின்னணி வெளியானது
25 Jun 2024
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் கதைக்களம் என்னவென்று வெளியானது.
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. இதன் பணிகள் அனைத்து முடிவுற்று, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இன்று (ஜுன் 25) ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே வெளிநாட்டில் தணிக்கைச் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், வெளிநாட்டு தணிக்கையில் இருந்து ‘இந்தியன் 2’ படத்தின் கதைக்களம் என்னவென்று வெளியாகியுள்ளது.
ஹாங்காங்கில் இருக்கும் சேனாதிபதி, சமூகவலைதளம் மூலம் இந்தியாவில் மீண்டும் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதை தெரிந்துக் கொள்கிறார். அங்கிருந்து இந்தியா வருகிறார். தமிழ்நாட்டில் யூடியூப் தளம் மூலமாக ஊழல் அரசியல்வாதிகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் சித்தார்த். சேனாதிபதி – சித்தார்த் இருவரும் இணைந்து என்ன செய்தார்கள் என்பதே ‘இந்தியன் 2’ படத்தின் கதைகளமாகும்.
‘இந்தியன் 2’ படத்தினை பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தாலும், இந்தப் படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது. ஆகையால் பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே போட்ட முதலீட்டினை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: indian 2 , kamal haasan