துல்கர் சல்மான், மிஷ்கின் நடிக்கும் ‘ஐ ம் கேம்’ படத்தின் பூஜை

04 May 2025

வேபேரர் பிலிம்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான "ஐ அம் கேம்" படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட  படக்குழுவினர்  கலந்துகொள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

“RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும்  இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.

தமிழின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஆண்டனி வர்கீஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். 

தனித்துவமான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்டமான படைப்பாக, நட்சத்திர நடிகர்களுடன் இப்படம் தயாராகி வருகிறது. 

 

Tags: i am game, dulquer salman, mysskin

Share via: