உருவாகிறது ‘ஹாட் ஸ்பாட் 2.0’
03 Aug 2024
‘ஹாட் ஸ்பாட்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘ஹாட் ஸ்பாட் 2.0’ உருவாகி வருகிறது.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், சாண்டி, அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹாட் ஸ்பாட்’. 4 கதைகள் கொண்ட ஆந்தாலஜி படமாக வெளியான இதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதே சமயத்தில் பலரும் இந்தப் படத்தின் சில காட்சிகளை கடுமையாக சாடினார்கள். இதனை முன்வைத்து ஓடிடியில் வெளியான போது கொண்டாடப்பட்டது. சிலர் விமர்சித்ததை வைத்தே படத்தினையும் விளம்பரப்படுத்தினார்கள்.
இதனிடையே, விக்னேஷ் கார்த்திக் தனது அடுத்த படத்துக்காக சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதைகள் கூறினார். ஆனால் எதுவுமே திட்டமிட்டப்படி தொடங்கவில்லை. அந்தச் சமயத்தில் பலரும் ‘ஹாட் ஸ்பாட் 2.0’ உருவாக்க ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக ‘ஹாட் ஸ்பாட் 2.0’ கதையினை உருவாக்கி படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் விக்னேஷ் கார்த்திக். இது மூன்று கதைகள் கொண்ட படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: hotspot, kalaiyarasan