ஹாலிவுட் நிறுவனம் இணையும் ‘ராமாயணம்’

13 Apr 2024

வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் ‘ராமாயணம்’ படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பூர் கபூர், யாஷ், சன்னி தியோல், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்டுள்ள படம் ‘ராமாயணம்’. இந்திய திரையுலகில் அதிகப் பொருட்செலவில் தயாராகும் படம் என்பது உறுதியாகி விட்டது. இதில் ராமனாக ரன்பூர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தினை நமித் மல்கோத்ரா, நிதேஷ் திவாரி மற்றும் யாஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. பெரிய பொருட்செலவு என்பதால் உலகளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது தயாரிப்பு தரப்பு.

இதற்காக ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags: warner bros, ramayanam, yash ,sai pallavi, ranbir kapoor

Share via: