தர்ஷன் நடிக்கும் ‘காட்ஸ் ஜில்லா’ ஆரம்பம்

15 Sep 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘காட்ஸ் ஜில்லா’.

புதுவிதமான கற்பனையுடன் ஒரு “ரோம்-காம்” படமாக உருவாகும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் வெளியான ‘சரண்டர்’ படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர்

மோகன் குரு செல்வா இயக்கத்தில் இன்று நடைபெற்ற பூஜையுடன் இப்படம் ஆரம்பமானது. இந்த பூஜையில் படக்குழுவினர், மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் வாழ்த்தினார்கள்.

புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக, காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, “காட்ஸ்ஜில்லா” இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

Tags: gods jilla

Share via: