தமிழ்நாட்டில் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் சிரஞ்சீவியின் ‘காட் பாதர்’

11 Oct 2022

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரித்த ‘காட்பாதர்’ தெலுங்குப் படம் கடந்த வாரம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியானது.  

சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். 

இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்தப் படத்தில் நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோருடன் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

லையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் தான் ’காட்பாதர்’ ஆக தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

தெலுங்கு ரசிகர்களைக் கவரும் விதத்தில் மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. 

படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்து விட்டது.

ஆந்திரா, தெலங்கானாவில் இந்த படத்திற்குக் கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழ்நாட்டிலும் இதன் தெலுங்குப் பதிப்பு வெளியாக இருக்கிறது. 

இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் பதிப்பும் வெளியாக இருக்கிறது.  தமிழ் பதிப்பிற்கான இறுதிக் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Tags: god father, chiranjeevi, nayanthara, thaman, mohanraja

Share via:

Movies Released On February 14