நாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியா

03 Feb 2020

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்று இறுதிச் சுற்று வரை வந்தவர் லாஸ்லியா.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, இலங்கை டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீக்கிரமே பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.

சினிமாவில் நடிக்க தனக்கும் ஆர்வம் இருப்பதாக நிகழ்ச்சியிலும் தெரிவித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்து வெளிவந்த பின் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார்.

இப்போது ‘ப்ரண்ட்ஷிப்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது.

கோடை விடுமுறையில் இந்திய மொழிகளில் படத்தை வெளியிட உள்ளார்கள்.

Tags: losliya, harbhajan singh, friendhip

Share via: