பொம்முக்குட்டி அம்மாவுக்கு - விஜய் டிவியில் புதிய தொடர்

03 Feb 2020

விஜய்டிவி மற்றொரு நெடுந்தொடர் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ இன்று முதல் ஆரம்பமாகிறது.  

இது இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

கதை:

மகளை இழந்த ஒரு தாயின் துயரம் மற்றும் தாயை இழந்த குழந்தையின் தவிப்பும் இக் கதையின் கரு. அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் ‘பொம்முகுட்டிஅம்மாவுக்கு’ கதை.

கதாபாத்திரங்கள்  :

தங்கம் :

தாயின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு குழந்தை.   பிக்பாக்கெட் கும்பலின் உறுப்பினரான வேணியால் அவள் வளர்க்கப்படுகிறாள். வேனணி அவளை பாசத்தோடும் பெரும்பாலான நேரங்களில் கோபத்தோடும் நடத்துகிறாள்.   அந்த கும்பலில் இருந்து தப்பித்த பின் தங்கம் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறாள், அவளுடைய கடந்த கால வாழ்க்கை தன்னை பாதிக்குமா என்று அவள் கவலைப்படுகிறாள்.

மீரா :

மீரா தங்கத்தின் தாய்.  தன் இரண்டு வயது மகளை சூழ்நிலை காரணமாக தொலைத்தவள்.  அவள் திருமணமாகி தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றிருந்தாலும் இழந்த தன் குழந்தைக்காக ஏங்குகிறாள். அவள் தனது கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பல எதிர்வினைகளை சந்திக்கிறாள்.   மீரா ஒரு அழகான நடனக் கலைஞர், அவர் நடனத்தில் ஆறுதல் தேடுகிறார்.

மீராவும் தங்கமும் ஒருவருக்கொருவர் சந்திப்பார்களா ? அதன் பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது பொம்முகுட்டி அம்மாவுக்கு தொடரின் சுவாரசியமான கதை.   

நடிகர்கள்:

ரோஜா (மீரா), கிரண் (கவுதம்),  ரித்வா (தங்கம்), நீபா (வேனி) மற்றும் பலர். சீரியலின்இ யக்குனர் பிரவீன் பென்னட்.

இந்த குடும்பத் தொடர் விஜய் டிவியில், இன்று பிப்ரவரி 3, 2020 திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Tags: vijay tv, bommukutti ammavukku

Share via: