எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக்

22 Nov 2020

காவ்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.

இப்படத்தில் சாய்பிரியா தேவா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பை கவனிக்கிறார். பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதியுள்ள கதைக்கு முருகேஷ்பாபு வசனம் எழுதுகிறார்.

படம் பற்றி தயாரிப்பாளர் விஜய்குமரன் கூறுகையில், 

“படத்தின் நட்சத்திர நடிகர்கள் குழுவே படம் ஒரு மிக அழுத்தமான காமெடி கலக்கலாக, தியேட்டரில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதை அடித்துக் கூறுவதாக இருக்கிறது. 

இயக்குநர் எழில் பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் தருவதில் வல்லவர். விநியோக தளத்தில் பெரிய அளவில் அவர்  கொண்டாப்பட  அதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 

தமிழின் தலைசிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையில்  முதன்முறையாக தனது திரைப்பயணத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தப் படத்தை இயக்குகிறார் இயக்குநர் எழில்.

ஒரு தயாரிப்பாளராக  பெரு மகிழ்ச்சியுடனும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடனும் உள்ளேன். அதிலும்  தமிழ் சினிமாவில் தங்கள் தனித்திறமையால் போற்றப்படும் நடிகர்களான பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது,  உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாகக் கவரும். அவர்களின் பலம் படத்தை பெரு வெற்றி பெறச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன். 

இயக்குநராக கதை சொல்லி ரசிகர்களை ஈர்க்கும் விதத்தைத் தாண்டி,  படத்தை ஒரே கட்டமாக படமாக்குவதில் வல்லவராக  இயக்குநர் எழில் இருப்பது எந்த தயாரிப்பாளருக்கும் பெரிய  வரம். படத்தை சுற்றி நிறைய அன்பும் நேர்மறைத் தன்மையும் சூழ்ந்துள்ள நிலையில் படத்தின் இறுதி வடிவத்தைக் காண பெரும் ஆவலாக உள்ளேன்,” என்கிறார். 
 

Tags: ezhil, parthiban, gowtham karthik, d imman

Share via: