‘திரௌபதி 2’ பற்றி இயக்குனர் மோகன்ஜி
23 Jan 2026
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில், மோகன்ஜி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திரௌபதி 2’.
இன்று வெளியாகும் இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் மோகன்ஜி கூறுகையில்,
‘‘திரௌபதி 2’ திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாகவும், தமிழ்நாட்டின் செழுமையான ஆனால் மறைக்கப்பட்ட பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வரலாற்று சினிமா ஆவணமாகவும் இருக்கும்.
14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் வரலாற்றை எந்த சமரசமும் இல்லாமல், துல்லியமான வரலாற்று உண்மைகளுடன் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. மன்னர் வீர சிம்ம கடவராயனாக ரிச்சர்ட் ரிஷி திரையில் பேரரசருக்கே உரிய கம்பீரமும் அதிகாரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ் தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பேரரசின் எழுச்சி- வீழ்ச்சி மூலம் தமிழ் வீரத்தின் வரலாற்றை பதிவு செய்யும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்று திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது” என்றார்.
Tags: draupathi 2, mohang
