‘டான்’ படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவீஸ்

07 Apr 2022

லைகா புரொடக்‌ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘டான்’.

மே 13 வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

ஏற்கெனவே இப்படத்தின் சில பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தொடர்ந்து பல பெரிய படங்களை தமிழ்நாடு வினியோக உரிமை பெற்று வெளியிட்டு வரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது ‘டான்’ படத்தைக் கைப்பற்றியுள்ளது.

Tags: don, sivakarthikeyan, sibi chakravarthi, anirudh, priyanka mohan

Share via: