சிவகார்த்திகேயன் ஜோடியாக மீண்டும் பிரியங்கா அருள்மோகன்
03 Feb 2021
லைக்கா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘டான்’.
இப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரியங்கா அருள்மோகன் மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘டான்’ படத்தில் நடிக்க உள்ளார்.ஹ
நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சூரி, மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்படம் காமெடி கலாட்டா படமாக உருவாக உள்ளது. நட்சத்திரத் தேர்வு முடிந்த பின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
Tags: sivakarthikeyan, anirudh, priyanka arul mohan, soori, sj surya, samuthirakani, cibi chakravarthy