டாக்டர், பாரிஸ் ஜெயராஜ் - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

03 Feb 2021

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’, சந்தானம் நடித்துள்ள ‘ பாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு இன்று அடுத்தடுத்து வெளியிடப்பட்டது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் ‘டாக்டர்’ படம் மார்ச் 26ம் தேதி வெளியாக உள்ளது.

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், அனைகா மற்றம் பலர் நடிக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலில் ‘டாக்டர்’ படத்தின் அறிவிப்பு வெளியானது, அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் அறிவிப்பும் வெளியானது.

பிப்ரவரி 1ம் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. அதையடுத்து பலரும் தங்களது படங்களின்வெளியீட்டைத் திட்டமிட்டு வருகிறார்கள்.

அடுத்த சில வாரங்கள் பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: sivakarthikeyan, santhanam, doctor, parris jeyaraj

Share via: