டிவிட்டர் சுயவிவரம், ‘அசுரன்’ என மாற்றிய தனுஷ்
21 Jan 2021
சமூக வலைத்தளங்களில் தமிழ் சினிமா பிரபலங்கள் டிவிட்டர் தளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் சினிமா நடிகர்களில் டிவிட்டரில் 9.6 மில்லியன் பாலோயர்களை வைத்து முதலிடத்தில் இருப்பவர் தனுஷ்.
தேவைப்படும் போது டிவிட்டரில் தகவல்களைப் பதிவிடும் வழக்கம் உடையவர் தனுஷ். இன்று திடீரென அவரது டிவிட்டர் சுயவிவரத்தில் தனது பெருக்குக் கீழே, "ASURAN/Actor" என மாற்றியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அசுரன்’. அப்படத்தில் இரண்டு மகன்களுக்கு அப்பாவாக நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்த தனுஷுக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது. அவரது நடிப்புப் பயணத்தில் ‘அசுரன்’ படம் மிக முக்கியமான படம் என பலரும் பாராட்டினார்கள்.
அப்படத்தின் பெயரை அவர் தற்போது தன்னுடைய டிவிட்டர் தளத்தின் சுயவிவரத்தில் இணைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பொங்கலுக்கு வெளியான சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தில் ‘நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்....ஈஸ்வரன்டா’ என சிம்பு வசனம் பேசி நடித்துள்ளார். அது டிரைலரில் கூட இடம் பெற்றுள்ளது.
தனுஷை விமர்சிக்கும் விதத்தில்தான் ‘ஈஸ்வரன்’ படத்தில் அப்படி ஒரு வசனம் இடம் பெற்றதாக பலரும் கூறினார்கள். அதற்குப் பதிலடி கொடுக்கவே தனுஷ் டிவிட்டரில் ‘அசுரன்’ என்பதை இணைத்திருக்கலாம்.
இதையடுத்து சிம்புவும் அவருடைய டிவிட்டர் சுயவிவரத்தில் ‘ஈஸ்வரன்’ என மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Tags: dhanush, asuran, simbu, silambarasan, twitter