கலர்ஸ் டிவி - புதிய அத்தியாயங்களுடன் ‘திருமணம்’ தொடர்

15 Jul 2020

கொரானோ ஊரடங்கு காலத்தில் தமிழ் டிவி ரசிகர்களுக்கு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. 

இத் தொலைக்காட்சியின் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்றான ‘திருமணம்’ தொடர் அடுத்த வாரம் ஜூலை 20ம் தேதி திங்கள் கிழமை முதல் புத்தம்புது பொலிவுடன், புதிய அத்தியாயங்களுடன் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொடராக ஒளிபரப்பாக உள்ளது. 

மேலும் பல தொடர்களும் அப்படி ஒளிபரப்பாகி வருகின்றன. 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள்...

ஓவியா 

திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மெகா ஹிட் தொடரான ஓவியா இந்த வார துவக்கத்தில் 400 அத்தியாயங்களை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இத் தொடர் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒரு தொடராகும். 

சரவணனுடன் தான் செய்து கொண்ட திருமணத்தின் பின்னணியில் உள்ள உண்மை குறித்து ஓவியா தெரிந்து கொள்கிறாள். அவளுக்கும் சூர்யாவுக்கும் இடையிலான உறவை வசீகரனும் சரவணனும் சந்தேகிக்கக் தொடங்கியதால் இருவரது வாழ்க்கையிலும் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பது இனி வரும் நாட்களில் இடம் பெறும். 

அம்மன் 

திங்கள் முதல் சனி வரை இரவு 8.00 மணி

அம்மன் மீது அதீத பக்தி கொண்ட சக்தி என்ற பெண், நீதிபதி உயிருக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்கிறாள். சங்குலிங்கத்தின் சதி திட்டத்திலிருந்து அவரைக் காப்பாற்ற அம்மனிடம் அவள் பிரார்த்தனை செய்கிறாள். சக்தியின் கடும் பிரார்த்தனையின் காரணமாக பார்வதி தனது கணவரை மீட்டாரா ? இல்லையா ? என்பதுதான் இனி வரும் நாட்களில் வர உள்ளன. 

இதயத்தை திருடாதே 

திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணி 

சகானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். எதிரிகளாக இருந்த அவர்கள் வாழ்க்கைத் துணைவர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில் பவானியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பின் நீலகண்டன் காணாமல் போய் விடுகிறார். நீலகண்டனை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனரா ? என்பதுதுன் அடுத்து ஒளிபரப்பாக உள்ளவை.

மாங்கல்ய தோஷம்

திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணி

தருண் நித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆறுமுகத்திடம் கூறுகிறார். அதற்கு ஆறுமுகம் மறுத்த போதிலும்,  நித்யாவைத் திருமணம் செய்வதில் தருண் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ரகுவரன் நித்யாவை திருமணம் செய்ய ஒரு மகத்தான திட்டத்தை வகுக்கிறான். இந்த நிலையில் தருணிடம் இருந்து நித்யாவை  திருமணம் செய்யத் துடிக்கும் ரகுவரனின் திட்டம் நிறைவேறுமா ?, நித்யா மற்றும் தருண் ஆகியோரின் தலைவிதி என்ன ? என்பதற்கான விடைகள் இனிவரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ளன. 

உயிரே

திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணி

செழியனும் பவித்ராவும் தங்கள் வாழ்க்கையைத் துவங்குகையில், பவித்ரா மீதான நரேனின் காதல் வலுவடைகிறது. இந்த நிலையில், நரேன் பிறந்த நாள் அன்று பவித்ராவும், நரேனும் நேருக்கு நேர் சந்திப்பதைத் தடுக்க செழியன் தந்திரம் செய்கிறான்.  இதற்கிடையே சுந்தரபாண்டி கையில் ஒரு பைலுடன் வருகிறார். அது அந்த முழு குடும்பத்தையும் திடுக்கிட வைக்கிறது. மறைக்கப்பட்ட பவித்ராவின் உண்மையை சுந்தரபாண்டி வெளியே சொல்கிறாரா ? இல்லையா ? என்பதுதுன் அடுத்து வர உள்ளவை. 

திருமணம்

திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணி

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பது குறித்து தெரிந்தவுடன் ஜனனி மிகுந்த வேதனையடைகிறாள். வேறொரு பெண்ணை மணந்து அவளுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சந்தோஷ் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த அவளுக்கு மேலும் வேதனை அதிகமாகிறது. 

சந்தோஷை தவிர்ப்பதற்காக அவள் சில நாட்கள் தன் தந்தையின் வீட்டில் தங்க முடிவு செய்கிறாள். சந்தோஷ் மற்றும் ஜனனிக்கு இடையே இந்த சிக்கலான சூழ்நிலையில் ஒரு இளம் பெண் சந்தோஷின் அலுவலகத்தில் வேலைக்குச் சேருகிறாள். இது அவர்களது திருமண வாழ்க்கையில் ஒரு பேரழிவிற்கு வழி வகுக்கிறது. அது என்ன என்பதுதான் இனி வரும் நாட்களில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. 

மேலும், திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா,  7 மணிக்கு ‘சந்திரகாந்தா’ ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. 

Tags: colors tamil, colors tv, thirumanam, oviya, amman

Share via: