கலர்ஸ் தமிழ் - ஏஆர் ரகுமான் தயாரித்த ‘99 சாங்ஸ்’ ஒளிபரப்பு

20 Aug 2021

கலர்ஸ் தமிழ் டிவியில், வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் மூவி ஆஃப் த மன்’-ல் வரும் ஞாயிறு, ஆகஸ்ட் 22ம் தேதியன்று மதியம் 1 மணிக்கும், அடுத்து மாலை 4 மணிக்கும் ‘99 சாங்ஸ்’ படத்தைப் பார்க்கலாம்.

ஏஆர் ரகுமான் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஒய்எம் மூவிஸ் சார்பாக தயாரித்துள்ள படம் இது. இந்த வருடம் ஏப்ரல் 16ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியானது. திரைக்கு வந்த நான்கு மாதங்களிலேயே உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இப்படத்தை ஒளிபரப்புகிறார்கள்.

தான் நேசிக்கின்ற இளம் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, 100 பாடல்களுக்கு இசைமைக்க வேண்டும் என்ற பெண்ணின் அப்பா வைத்த சவாலை ஏற்றுக் கொண்டு,  இசையில் பேரார்வம் கொண்ட இசைக்கலைஞரான ஜே (எஹான் பட்) வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

ஏஆர் ரகுமான் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அவரது ரசிகர்களுக்கு தனி இசை விருந்தாக அமைந்தது. 
 
‘99 சாங்ஸ்’ படம் கலர்ஸ் தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளத பற்றிய ஏஆர் ரகுமான் கூறுகையில்

“எனது திரைப்படமான 99 ஸாங்ஸ் (99 Songs),  தமிழ்நாட்டின் பிரபல சேனலான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை அறிந்து மிகவும் உற்சாகமும், ஆனந்தமும் கொண்டிருக்கிறேன்.  YM பேனர்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட எனது முதல் திரைப்படமாக இது இருப்பதால், பார்வையாளர்களும், ரசிகர்களும் எந்த அளவிற்கு அனுபவித்து ரசிக்க உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் இருக்கிறேன். 

99 ஸாங்ஸ் (99 Songs), படத்தின் பாடல்கள் ஒரு இசைக்கலைஞராக எனது இசைத் திறனை மேலும் உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசித்து, அனுபவிப்பதோடு, இப்பாடல்களின் இசையையும் உணர்ந்து இனிய அனுபவத்தை ரசிகர்கள் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார்.

 

Tags: colors tamil, 99 songs, ar rhman, colors tamil tv, கலர்ஸ் தமிழ், கலர்ஸ் டிவி, ஏஆர் ரகுமான், 99 சாங்ஸ்

Share via: