தடை நீக்கம், நாளை ‘சக்ரா’ திட்டமிட்டபடி ரிலீஸ்
18 Feb 2021
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ஆனந்தன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’.
இப்படம் நாளை பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கு காரணமாக படத்தின் வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் அந்தத் தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நாளை படம் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.
அது குறித்து விஷால் கூறுகையில்,
“ஆம், எப்போதுமே தடைகள், பிரச்சினைகளை சந்திப்பதுண்டு. சினிமா உலகத்திற்கும், எனது தொழிலுக்கும், எப்போதும் எனக்கு உண்மையாக இருந்திருக்கிறேன்.
தடை நீக்கப்பட்டுவிட்டது, ‘சக்ரா’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. பிப்ரவரி 19 ‘சக்ரா’ படத்திற்கு நல்ல நாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.
ஒரு தயாரிப்பாளருக்காக மட்டுமல்லாது, இந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, சரியான நேரத்தில் உத்தரவை வழஙகிய உயர்நிதிமன்றத்திற்கு நன்றி.
நாளை திட்டமிட்டபடி ‘சக்ரா’ படம் வெளியாகும், வாய்மையே வெல்லும்,” என விஷால் தெரிவித்துள்ளார்.
Tags: vishal, chakra, yuvanshankar raja, shradha srinath, regina