Black Widow. புதிய டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு
08 Apr 2021
மார்வல் தயாரிப்பில் ஸ்கேர்லட் ஜோஹன்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘Black Widow’ படத்தின் புதிய டிரைலர் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
மார்வல் சூப்பர் ஹீரோ Natasha Ramanoff கதாபாத்திரத்தின் முன் கதையை, அந்தக் கதாப்பாத்திரம், கடந்து வந்த பாதையை சொல்லும் ஆக்சன் திரில் படமாக உருவாகியுள்ள படம் இது.
நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு, வரும் ஜூலை 9ம் தேதி அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.
Black Widow சூப்பர் ஹீரோவாக மாறும் முன் Natasha Ramanoff, ஒரு உளவாளியாகப் பணிபுரியும் காலத்தில், அவரை சூழும் தடைகளை எதிர்த்து அவர் போராடுவதும், மீண்டும் பிரச்சனைக்குள்ளாகும், தன் பழைய வாழ்வின் உறவுகளின் சிக்கல்களையும் எப்படி தீர்க்கிறார் என்ற கதையை, அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக சொல்லியுள்ளது இப்படம்.
மார்வல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய வசூலை குவித்து வெற்றி பெற்ற “Avengers End Game” படத்திற்கு பிறகு மார்வல் திரைத் தொடரில் ( Marvel Cinematic Universe) Phase 4 ல் முதல் திரைப்படமாக இப்படம் வெளியாகிறது.
Scarlett Johansson முதன்மை பாத்திரத்தில் Natasha/Black Widow, வாக நடித்திருக்கிறார். Yelena வாக Florence Pugh நடித்துள்ளார்/ David Harbour இப்படத்தில் Alexei/The Red Guardian, எனும் பாத்திரத்திலும், நடிகை Rachel Weisz இப்படத்தில் Melina கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இயக்குநர் Cate Shortland இயக்க, Kevin Feige இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.
Tags: black widow, scarlett johansson, marvel studios, avengers endgame