வண்ணமயமான ‘பிக் பாஸ் சீசன் 4’, இன்று ஆரம்பம்

04 Oct 2020

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது.

கடந்த ஜுன் மாதமே ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி கொரானோ காரணமாக தள்ளிப் போடப்பட்டது. இந்த நான்காவது சீசனில் வீட்டை வண்ணமயமாக மாற்றியுள்ளார்கள்.

இதற்கு முன் மூன்று சீசன்களில் இருந்த வீட்டை விட இந்த சீசனில் வீட்டை முற்றிலுமாக மாற்றி இருக்கிறார்கள். இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி தீபாவளி, கிறிஸ்துமஸ், புது வருடக் கொண்டாட்டங்களைக் கொண்டாடப் போகிறது.

கார்டன் ஏரியா, நுழைவாயில், வாஷ்ரூம், பெட்ரூம், லிவிங் ரூம், கிச்சன் ஆகியவை மகிழ்ச்சிகரமாகவும், கொண்டாட்ட மனநிலையிலும் இருக்கும்படி வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

வாஷ் ரூம் ஏரியாவிற்கு இதுவரையில் ஒரு வழி மட்டுமே இருக்கும். இந்த முறை அந்த ஏரியாவையும், வீட்டையும் அமரும் ஏரியா ஒன்றை வைத்து அதனுடன் இணைத்துள்ளார்கள்.

ஜெயில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும். அது இதற்கு முன்பு இருந்தது போல் இருக்காதாம்.

சீசன் 4ன் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் தினத்தன்றே அனைத்து போட்டியாளர்களும் வீட்டை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லையாம். அது நிகழ்ச்சியில் புதிது என்கிறார்கள்.

இன்று மட்டும் 6 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, அடுத்து தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Tags: bigg boss 4, bigg boss, kamalhaasan, vijay tv

Share via: