அருள்நிதியை இயக்கும் ‘பம்பர்’ இயக்குநர்

26 Aug 2024

அருள்நிதி நடிக்கவுள்ள புதிய படத்தினை இயக்கவுள்ளார் இயக்குநர் செல்வகுமார்.

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தினைத் தொடர்ந்து பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. இதனை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கி வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அருள்நிதி.

இந்தப் படத்தினை இயக்கவுள்ளார் செல்வகுமார். இதற்கு முன்னதாக ‘பம்பர்’ என்னும் படத்தினை இயக்கி இருக்கிறார். வெற்றி, ஷிவானி நாராயணன், ஹரீஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஆனால், படத்தை பார்த்த அனைவருமே பாராட்டினார்கள்.

அருள்நிதி – செல்வகுமார் இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Tags: arulnithi

Share via: