அரசன் - இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
20 Feb 2026
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிலம்சரன் நடித்து வரும் படம் ‘அரசன்’.
வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. சிலம்பரசன் இரு வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி உள்ளது.
Tags: arasan, vetrimaaran, silambarasan, anirudh
