வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’
07 Oct 2025
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன்பு வெளியானது.
வெற்றிமாறன், சிம்பு இருவரது கூட்டணி பற்றிய தகவல் வெளியானதில் இருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படம் பற்றி விரைவில் அறிவிக்கிறோம் என சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதன்படி இன்று அறிவிப்பு வெளியானது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பும், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்தப் படம் ‘வட சென்னை’ பகுதியை மையமாகக் கொண்ட களமாக இருக்கும் என்றும் வெற்றிமாறன், தனுஷ் இணைந்த ‘வட சென்னை’ படத்தில் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த ‘அரசன்’ உருவாகலாம் என்றும் தெரிகிறது.
Tags: arasan, vetrimaaran, silambarasan
