’பீஸ்ட்’ நடிகையை மணக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நடிகர்

03 Apr 2024

ஏப்ரல் 24-ம் தேதி தீபக் பரம்போல் மற்றும் அபர்ணா தாஸ் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

’மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் உள்ள நடிகர்களில் ஒருவர் தீபக் பரம்போல். மலையாளத்தில் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் அனைத்து மொழிகளிலும் அறியப்படும் நடிகராக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

இவருக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸுக்கும் ஏப்ரல் 24-ம் தேதி கேரளாவில் உள்ள வடக்கன்சேரியில் திருமணம் நடைபெறவுள்ளது. மலையாளத்தில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்தவர் அபர்ணா தாஸ்.

தீபக் பரம்போல் – அபர்ணா தாஸ் இருவரும் ‘மனோகரம்’ படத்தில் இணைந்து நடித்தவர்கள். அப்போது முதல் இருவரும் காதலித்து வருகிறார்கள். திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags: aparna das, deepak parampol

Share via: